சென்னை: சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக கூட வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள டி.டி.கே. நகர், சக்தி நகர், கிருஷ்ணன் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் மீட்பு குழுவினர் அப்பகுதியில் உள்ள மக்களை பத்திரமாக மீட்டு அருகிலுள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், அத்தியாவசிய பொருள்களை கூட வாங்க முடியாமலும் இன்னலுக்குள்ளாகி உள்ளனர்.
அரசு உடனடியாக பொதுமக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, மின் மோட்டார்களைக் கொண்டு வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்: அவதியில் மக்கள்