ETV Bharat / city

'நாங்கள் தான் உண்மையான அதிமுக; கோவை செல்வராஜை தெரியாது' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! - Jayakumar

'அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாங்கள்தான் உண்மையான அதிமுக, கோவை செல்வராஜ் எந்த கட்சியைச் சார்ந்தவர் என்பது தெரியாது' என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தான் உண்மையான அதிமுக- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Aug 1, 2022, 4:40 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு குறித்து தமிழ்நாடு தேர்தல் அலுவலருடன் நடந்த கூட்டத்திற்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார்,

'வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் உடன்படுகிறோம். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதைப்போன்று மற்ற 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்க வேண்டும்.

அதிமுக சார்பில் நானும் , பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்து கொண்டதாகவும், கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்ந்தவர் என்பது தெரியாது. யாராவது எதையாவது சொல்வார்கள். அதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ எனத்தெரிவித்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், 'தற்போது தொழில் துறையைப் பொறுத்தவரை செமி கண்டக்டர் உற்பத்தித்தொழில் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இத்தகைய செமி கண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட உள்ள வேதாந்தா மற்றும் பாக்ஸ் கான் நிறுவனங்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி மகாராஷ்டிரா மாநிலத்திற்குச் சென்றுவிட்டது’ எனக்குற்றம்சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக சார்பில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு ’கொட்டாம்பாக்கு கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி சொல்கிறார்’, என்பது போல அர்த்தம் புரியாமல் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: 'தேர்தல் ஆணைய பதிவேட்டின்படி நாங்கள் தான் உண்மையான அதிமுக‌' - ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.