தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேி நடைபெறவுள்ளது. அதற்கானப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சியினரும் தங்களது பரப்புரையை தொடங்கிவிட்டனர்.
இதனிடையே, மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் வரும் தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
அதற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அதைத்தொடர்ந்து இன்று அவர் தனது ட்விட்டரில் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர், "மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மதம் இல்லை; சாமி இல்லை; நீங்கள் தான் எனக்கு சாமி' கமல்ஹாசன்!