ETV Bharat / city

'பருந்தாகுது ஊர்க்குருவி' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி - விவேக் பிரசன்னா

இளம் படக்குழுவினரின் 'பருந்தாகுது ஊர்க்குருவி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி
author img

By

Published : Jun 20, 2022, 9:25 AM IST

இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் Lights On Media வழங்கும் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் 'பருந்தாகுது ஊர்க்குருவி'. 'வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது..' என்ற கருத்தை மையமாகக் கொண்டு, இளைஞர்கள் குழுவின் புது முயற்சியில், திரில் பயணமாக உருவாகியுள்ள 'பருந்தாகுது ஊர்க்குருவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (ஜூன்19) வெளியானது.

இப்படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இளம் படக்குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 'பருந்தாகுது ஊர்க்குருவி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதே இப்படம்.

'பருந்தாகுது ஊர்க்குருவி' ஃபர்ஸ்ட் லுக்
'பருந்தாகுது ஊர்க்குருவி' ஃபர்ஸ்ட் லுக்

புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E.ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கூடலூர் மண்வயல் கிராமம் அருகே மனிதர்கள் நடமாடாத இருள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் படக்குழு கடும் உழைப்பில் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளது. இதுவரை திரையில் கண்டிராத புது அனுபவமாக இத்திரைப்படம் இருக்கும்.

இயக்குநர் ராம் அவர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய கோ.தனபாலன் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தை தயாரித்துள்ளது. சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா.P, வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இதையும் படிங்க: முத்த மழை பொழிந்த கமல் புகைப்பட தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.