தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலத்தில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அம்பத்தூர், ராம் நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடமும் சோதனை செய்து அவர்கள் வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதால் பலர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
இந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டு நடந்த இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க:
மின்வாரிய அலுவலர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்!