ETV Bharat / city

முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற 8,900 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு - சான்றிதழ் சரிபார்ப்பு

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3,236 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 3 நாட்களில் 8,900 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதிப்பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

author img

By

Published : Sep 1, 2022, 5:21 PM IST

Updated : Sep 1, 2022, 5:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நடப்பாண்டில் 2,955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதற்காக 2020-21 ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கணினி பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் வழி எழுத்து தேர்வு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட்டது.

அதன் முடிவுகள் ஜூலை 4 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதில் தகுதிப்பெற்றவர்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் ஒரே மதிப்பெண் பெற்று இருப்பதால், அவர்களையும் சேர்த்து சுமார் 8,900 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வளாகத்தில் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்புக் கடிதம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதார்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தக்கட்ட பணித் தேர்விற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேர்வதை தவிர்த்து வளாகத்திற்குள் அமைதி காத்திட வேண்டும். செல்போன், பைகள் உள்ளிட்டப் பொருள்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. இதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பேற்காது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக்கூடாது.

மேலும் பாலுட்டும் தாய்மார்கள் வந்தால், முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சான்றிதழ் சரிபார்த்து அனுப்பப்படும். ஒரு மணி நேரத்திற்கு 360 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதற்கான கடிதம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். அழைப்புக் கடிதத்துடன் வருபவர்களையும் காவல்துறையினர் சரிபாா்த்தப்பின்னரே அனுமதிக்கப்படுவார்கள், என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'பள்ளிக்கல்விக்கு நிதி தாருங்கள்' - நிதியமைச்சரை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

Last Updated : Sep 1, 2022, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.