ETV Bharat / city

'இந்தியாவை இந்திமயமாக்குவதுதான் மோடியின் நோக்கம்..!' - தொல். திருமா குற்றச்சாட்டு - tamazhachi thanga pandian

சென்னை: "ஒட்டுமொத்த இந்தியாவை இந்தி மயமாக்குவதுதான் மோடியின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு இடம் அளிக்காத ஒரே மாநிலம் தமிழகம்தான்" என்று, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

'மோடியின் நோக்கம் இந்தியாவை இந்தி மையம் ஆக்குவது'-தொல். திருமா
author img

By

Published : Jun 2, 2019, 11:04 PM IST

திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர், சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்திற்கு சென்று தொல்.திருமாவளவனை நேரில் சந்தித்தனர். வெற்றிப் பெற்ற இருவருக்கும் தொல்.திருமாவளவன் வாழ்த்துகளை நன்றியும், வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

"கருணாநிதி இருந்திருந்தால் எப்படி கூட்டணி அமைத்திருப்பாரோ, அதேபோல வெற்றிகரமான கூட்டணி அமைத்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் வெற்றியை தலைவர் கலைஞர் இருந்து பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவர் இல்லை என்பது மிகப்பெரிய குறைப்பாடு. அந்த இடத்தை நெருப்பும் வல்லமை வாய்ந்த ஆளுமை உடையவர் ஸ்டாலின் என்பதை இந்த தேர்தல் நிரூப்பித்துள்ளது.

மோடியின் நோக்கம் ஒட்டு மொத்த இந்தியாவை இந்தி மயமாக்குவதான். அதற்கு இடம் வழங்காத ஒரே மாநிலம் தமிழகம் தான். இந்தி திணிப்பு மூலம் மறைமுகமாக நம் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். இது வெறும் மொழி திணிப்பு அல்ல கலாச்சார திணிப்பும் கூட. நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்கட்சிகளாக இருந்து ஒட்டு மொத்த இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற, பாதுக்காக்க திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்போம்" என்றார்.

தொல். திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.