விசிக தலைவர் திருமாவளவன் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமியை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் கந்தசாமி, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இலவச கல்வி திட்டம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து திருமாவளவன் கூறுகையில், "புதுச்சேரியில் உள்ள பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதற்காக முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
தனி சின்னத்தில் போட்டி
இலவச கல்வி திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சனாதன சக்திகளை கால் ஊன்ற விடாமல் இருக்க உறுதி ஏற்போம்.
இந்த ஆண்டு அதற்கான ஆண்டாக மலரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விசிக வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் தான் போட்டியிடும்" என்றார்.
இதையும் படிங்க: மனு எங்கே உள்ளது? பிரக்யா பேச்சில் உள்ளது என்கிறார் திருமா!