'ஜெய்பீம்' பட சர்ச்சைக்கு தூண்டுகோளாக செயல்பட்ட அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செய்தித் தொடர்பாளர் விக்ரமன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விக்ரமன் கூறியதாவது, "சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னிய சமுதாயத்தை வன்முறையாளர்களாக காட்சிப்படுத்துவதாகக் கூறி பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் படத்தில் உங்களின் வன்மத்தைக் காட்டினால் ரசிகர்கள் அதை திரையரங்குகளில் காட்டுவார்கள் எனக் கூறியிருந்தார். அதன் பின்பே பாமகவைச் சேர்ந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ், மயிலாடுதுறை பழனிச்சாமி ஆகியோர் நடிகர் சூர்யாவை மிரட்டும் தொனியில் வீடியோக்கள் வெளியிட்டனர்.
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு நீக்கம், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி ஆகியவற்றை மறைப்பதற்காகவே அன்புமணி சாதி மோதலைத் தூண்டிவிடும் செயலை செய்து வருகிறார். இது கண்டிக்கத்தக்க செயல்” என்றார்.
இதையும் படிங்க: எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி - 'ஜெய் பீம்' சூர்யா