சென்னை: சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “உலகப் பொதுமறை திருக்குறள்; உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சி.பி.எஸ்.இ. 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதராக குடுமி வைத்து விபூதி பூசப்பட்டவராக வரையப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.