ETV Bharat / city

பாஜக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்க -வைகோ! - Vaikom arjured for arrest bjp kalyanaraman in goondas act news

சென்னை: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திவரும் பாஜக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்க என வைகோ தெரிவித்துள்ளார்.

Vaikom arjured for arrest bjp kalyanaraman in goondas act

author img

By

Published : Feb 2, 2021, 5:13 PM IST

இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், தமிழ்நாட்டிலும் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சிக்கின்றது. கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் படுதோல்வியைச் சந்தித்த பாஜக அதை சகித்துக்கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கத் துடிக்கிறது.

தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில், பாஜவைச் சேர்ந்த கல்யாணராமன் என்கின்ற பேர்வழி, கோடிக்கணக்கான மக்கள் போற்றி வணங்கும் இறை தூதர் நபிகள் நாயகம் குறித்து இழிவான கருத்துகளை பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார். இந்தப் பேர்வழி தந்தை பெரியாருக்கு எதிராகவும், திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினர் மீது வன்மத்துடனும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் நேரடியாகப் பேசி அவதூறு செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மதவன்முறைகளைத் தூண்டவும், அதன்மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்ற நப்பாசையுடனும் கல்யாணராமன் போன்ற இழி பிறவிகளை ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கும்பல் பின்னணியிலிருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் பாஜக பிரமுகர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். அவருக்கு பக்கபலமாகப் பின்னணியில் இருப்பவர்களையும் இனம் கண்டு, அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...ராஜிவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எழுவர் யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.