ETV Bharat / city

'உலக கோடீஸ்வரன் என்னை சந்திக்க கேட்ட அனுமதியையே மறுத்துவிட்டேன்' - வைகோ

author img

By

Published : Sep 16, 2019, 10:58 AM IST

சென்னை: ஸ்டெர்லைட் பிரச்னையில் என்னை சமரசம் செய்ய உலக கோடீஸ்வரன் என்னை சந்திக்க அனுமதி கேட்டதற்கு, முடியாது என மறுத்துவிட்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

vaiko

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளான நேற்று மதிமுக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில், திமுக தலைவர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநாடு நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிறைவுரையாற்றினார். அப்போது அவர், ”நான் நலமாக இருக்கிறேன். தொண்டர்களின் உற்சாகம் என்னை இன்னும் பல காலம் நலமாக வைத்துக்கொள்ளும். ஈழத்தமிழருக்கு நான் நடத்திய போராட்டங்களைப் போல் எந்தக் கட்சியும் நடத்தியது இல்லை. கூட்டத்தை கூட்டி யார் வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் நாடாளுமன்றத்தில் 100 பாஜக எம்.பி.க்களுக்கு மத்தியில் தன்னந்தனியே ஒழியட்டும்... ஒழியட்டும்... இந்தி ஒழியட்டும் என்று கூறினேன். நம்மைவிட துணிவானவர்கள் என்று யாரும் இல்லை என்று சொல்லுங்கள்.

வைகோவின் நிறைவுரை

ராம் ஜெத்மலானியின் மறைவுக்கு வருந்துகிறேன். மூன்று பேரினுடைய தூக்கு கையிறை அறுத்து எரிந்தோம் என்ற தகுதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தவிர வேறெந்தக் கட்சிக்கு இருக்கிறது என்று கேளுங்கள்.

ஸ்டெர்லைட் வழக்கை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த காலத்தில், உலக கோடீஸ்வரன் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டான். நான் ஒரு நிமிடம் கூட சந்திக்க முடியாது என்று கூறினேன்.

அண்ணா திமுக அரசு என்று சொல்ல வருத்தம் கொள்கிறேன். மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாது காலடியில் கைகட்டி சேவகம் செய்கிறார்கள். தொண்டைக் குழியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி நீதிமன்றத்தில் வாதாடியபோது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் கசிந்தது. நாங்கள் தமிழ்நாட்டில் செய்த சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. இருப்பினும் இன்னமும் சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன.

வைகோவின் நிறைவுரை

சனாதன சக்திகள் படையெடுத்து வருகின்றன, அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும். பாஜக, மோகன் பகவத், இந்துத்துவ சக்திகள் என அனைவரும் கொண்டுவருவது மரக்குதிரை என்கிற மதத்தைதான். நாம் கோயிலுக்குப் பக்தியில் போகும்போது நம்மை வசக்கிவிடலாம் என்று கருதுகிறார்கள். அதனால்தான் நான் காஞ்சி கோயிலுக்குப் போனேன்.

நம்முடைய கோயில்கள்தான் நமது கலை பொக்கிஷங்கள். அந்தக் கோயில்களுக்கு நாம் எல்லோரும் செல்வோம். மசூதிக்கு போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன். ஜெபக்கூடங்களுக்கு போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன். மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன்.

நீ பெரியாரிடமிருந்து மாறுபட்டு விட்டாயா என்று கேள்விகள் வரும். ஆழ்ந்து சிந்தித்துச் சொல்கிறேன், 1940-களில் பேசியதை 1960-களில் அண்ணா பேசவில்லை. நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமல்ல எதிரிகள் கைக்கு அதிகாரம் போய்விடக் கூடாது. அதற்கு போர் தந்திரத்தை மாற்று, கொள்கையை மாற்று. மத நம்பிக்கையில்லையா நீ கோயிலுக்குப் போகாத, ஆனால் போகின்றவர்களை ஏன் கேவலப்படுத்துகிறாய். அவன் விருப்பம் போயிட்டு போறான், நீ சொல்லாவிட்டாலும் 99 விழுக்காட்டினர் போய்க்கொண்டுதான் இருக்கின்றனர்” என அவர் பேசினார்.

Intro:Body:அறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாளான இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ம.தி.மு.க. மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டின் இறுதி அமர்வில் முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா பங்கேற்று சிறப்புரை வழங்கினார். பின்னர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிறைவுரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், "நான் நலமாக இருக்கிறேன். உங்கள் உற்சாகம் என்னை இன்னும் பல காலம் நலமாக வைத்துக்கொள்ளும்.

ஈழத்தில் எங்கள் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். நாங்கள் இந்த உலகத்தில் அனாதையாகி விட்டோமா என்று ஜந்தர் மந்தரில் போராடினேன். ராஞ்சியில் காவல்துறையினர் யஷ்வந்த் சின்காவை தாக்கினார்கள்.கை முறிக்கப்பட்ட போதும் அந்த போராட்ட களத்திற்கு வந்தவர் யஷ்வந்த் சின்கா அவர்கள். நன்றியை என்றும் வைகோ மறக்கமாட்டேன். ஈழ தமிழருக்கு நான் நடத்திய போராட்டங்களை போல் எந்த கட்சியும் நடத்தியது இல்லை.

டாக்டர் பரூக் அப்துல்லா இன்று இங்கு வந்து கர்ஜித்திருக்க வேண்டும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறையில் இருக்கிறேன். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் சட்டத்தை அமித் ஷா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போது நான் மோடியுடன் இருந்தேன். நான் இதற்கு எதிராக வாக்கு செலுத்துவேன் என்று அப்போதே மோடியிடம் கூறினேன். வைகோவை சமரசம் செய்துவிட முடியாது. காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கி விட்டீர்கள். ஐ.நா பிரச்னையாக்கி விட்டீர்கள்.

கூட்டத்தை கூட்டி யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் 100 பா.ஜ.க. எம்பி க்களுக்கு நடுவே தன்னந்தனியே ஒழியட்டும் ஒழியட்டும் இந்தி ஒழியட்டும் என்று கூறினேன். நம்மைவிட துணிவானவர்கள் என்று யாரும் இல்லை என்று சொல்லுங்கள்.

ராம் ஜெத்மலானிக்காக வருந்துகிறேன். யஷ்வந்த் சின்காவை போல் என் மீது பிரியம் கொண்டவர் ஜெத்மலானி. 3 பேரினுடைய தூக்கு கையிறை அறுத்து எரிந்தோம் என்ற தகுதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திர்க்கு தவில வேறெந்த கட்சிக்கு இருக்கிறது என்று போய் சொல்லுங்கள்.

ஸ்டெர்லைட் வழக்கு எதிர்த்து போராடிக் கொண்டிருந்த காலம். உலக கோட்டீஸ்வரன் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டான். ஒரு நிமிடம் கூட சந்திக்க முடியாது என்று கூறினேன்.

நீதிபதி வட்டாரத்தில் கூட பேசுகிறார்களாம். இங்கு ஒருத்தன் ஜெயிலை விட்டுவர விரும்பவில்லை.

நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேடத்தில் வரலாம். குற்றவாளி கூண்டில் நிற்பேன் அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் சென்று வாதிடுவேன். இது வைகோ என்ற எளிய மனிதனை தவிர யாருக்கும் வாய்க்காது.

அண்ணா தி.மு.க அரசு என்று சொல்ல வருத்தம் கொள்கிறேன். மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாது காலடியில் கைகட்டி சேவகம் செய்து அவர்கள் காலால் இட்டதை தலையால் செய்து கொண்டிருக்கின்ற அரசு காவலேதுறையை ஏவி 13 பேரை சுட்டுக் கொன்றார்கள். தொண்டை குழியில் சுட்டு படுகொலை செய்யப்பட்டத்தை பற்றி நீதிமன்றத்தில் வாதாடிய போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் கசிந்தது.

2.400 கோடி மதிப்பிலான நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஜ்மல் கானை வழக்கு தொடர்ந்தேன். மோடி நிறைவேற்ற வேண்டும் என்று துடித்த திட்டத்திற்கு நான்கரை ஆண்டுகாலமாக தடை வாங்கியவன் வைகோ. இனி நான் என்ன சாதிக்க வேண்டும்.

அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று கூறியபோது அதை எதிர்தௌது நடைபயணம் சென்றேன். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபயணம் சென்று தன் மகன் பெயரில் 3 சதவிகித பங்குகளை வாங்கியவன் தற்போது நியூட்ரினோ திட்டத்தில் பங்கு வாங்க நடைபயணம் செய்கிறான் என்று போட்டார்கள். சகிக்க முடியாமல் தீ குளித்து எரிந்தான் சிவகாசி ரவி. இதே செய்தி நெஞ்சை கனலாக எரித்ததால் தான் என் மனைவியின் அண்ணன் மகன் தேர்தல் காலங்களில் எனக்கு பக்கபலமாய் விளங்கிய சரவணசுரேஷ் 5 லிட்டர் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்து எரித்து கொண்டான். நான் குடும்ப அரசியல் நடத்துபவன் அல்ல. என் குடும்பத்தினரை கொண்டுவந்து பதவிகளில் உட்கார வைப்பவன் அல்ல நான். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காக காக்க என் குடும்பத்தில் ஒரு உயிரை கொடுத்துள்ளோம்.

நெய்வேலி நிலக்கரி நிலையம் பறிபோகும் சூழலில் அதை தடுத்து நிறுத்தியது ம.தி.மு.க. என்று போய் சொல்லுங்கள். எங்களிடம் 50 லட்சம் உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் சாதித்ததை எந்த கட்சியும் சாதிக்கவில்லை.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தளபதி என்று அழைப்பார்கள். நான் திராவிட இயக்கத்தின் போர்வாள் என்று அழைக்கப்படுபவன். அந்த தளபதியும் வாளும் என்றும் இணைந்தே இருக்கும் யாரும் பிரிக்க முடியாது என்று ஆசிரியர் வீரமணி சொன்னார். யாரும் பிரிக்க முடியாது. நான் சொன்ன வாக்கை காப்பாற்றுவேன். திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் மலரும். அவர் முதலமைச்சராக வந்தே தீர்வார். அதற்கு நாங்கள் பக்கபலமாய் இருப்போம்.

நாங்கள் தமிழ்நாட்டில் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. இன்னமும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. சனாதன சக்திகள் படையெடுத்து வருகின்றன. அவர்களை எதிர்த்து போராட வேண்டும்.

கோவிலுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை தான் நாட்டில் அதிகம். இசுலாமியர்கள் தொழுகைக்கு செல்வது போல் கிறிஸ்தவர்கள் ஜெபத்துக்கு செல்லுவது போல கோடிக்கணக்கான பக்தர்கள் நாளும் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். நாம் நம் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். வீரமணி ஏற்கமாட்டார். ஆனால் நான் என்னுடைய கருத்தில் அழுத்தமாக இருக்கிறேன். மதம் பா.ஜ.க மரக்குதிரை. தமிழ்நாட்டு மக்களை ஜெயிக்க முடியாது. தமிழர்கள் அறுபடை வீடுகளுக்கு செல்பவர்கள். அங்கே நுழைய முடியுமா என்று பார்த்து நுழைகிறார்கள்.

பா.ஜ.க., மோகன் பகவத், இந்துத்துவ சக்திகள் என அனைவரும் கொண்டுவருவது மரக்குதிரையை தான் (Trojan Horse). மரக்குதிரை என்கிற மதத்தை பா.ஜ.க. கொண்டுவருகிறது. நம் கோவில்களுக்கு கொண்டு வருகிறார்கள். நாம் பக்தியில் போகும் போது நம்மை வசக்கி விடலாம் என்று கருதுகிறார்கள். அதனால் தான் நான் காஞ்சி கோயிலுக்கு போனேன். நம்முடைய கலை பொக்கிஷங்கள் நம்முடைய கோவில்கள். அந்த கோவில்களுக்கு நாம் எல்லோரும் செல்வோம்.

மசூதிக்கு போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன். ஜெபக்கூடங்களுக்கு போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன். கோயிலுக்கு போகின்றவர்களையும் வாழ்த்துகிறேன். நீ பெரியாரிடமிருந்து மாறுபட்டு விட்டாயா என்று கேள்விகள் வரும். ஆழ்ந்து சிந்தித்து சொல்கிறேன். 40 களில் பேசியதை 60 களில் அண்ணா பேசியவில்லை. நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமல்ல எதிரிகள் கைக்கு அதிகாரம் போய்விடக்கூடாது. சனாதன சக்திகளின் கைக்கு அதிகாரம் போய்விடக் கூடாது. அதற்கு போர் தந்திரத்தை மாற்று. கொள்கையை மாற்று. மத நம்பிக்கையில்லையா நீ கோயிலுக்கு போகாத போகின்றவர்களை ஏன் கேவலப்படுத்துகிறாய். அவன் விருப்பம் போயிட்டுபோறான். நீ சொல்லாவிட்டாலும் 99 சதவிகிதம் மக்கள் போய் கொண்டுதான் இருக்கின்றனர்.

எங்க ஊரில் எங்க பாட்டனார் கட்டிய சுந்தரராஜ பெருமாள் கோயிலை தற்போது எங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து கும்பாபிஷேகம் செய்ய கோபுரம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். எங்க ஊரு பிள்ளையார்கோயில் தான் பழமையான கோயில். அதற்கு கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்து கொடுத்தேன். என் மக்கள் விரும்புகிறார்கள் நான் செய்து கொடுக்கிறேன்.

இதுதான் அவர்களின் கொள்கை. ட்ராய் நகரத்து மரக்குதிரையை போல் மதத்தை கொண்டுவந்து கைப்பற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். கேரளாவில் செய்து பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டார்கள். மார்க்சிஸ்ட் ஏமாந்து விட்டார்கள்.எவ்வளவு அடிப்பட்டு வந்தவன் நான். நாம் ஜாக்கிரதையாக இருப்போம். மரக்குதிரையை கொண்டுவர நினைத்தால் ட்ராய் கோட்டைக்கு வெளியே நின்று அதை தீயை வைத்து கொளுத்துக்கின்ற இடத்தில் நாங்கள் இருப்போமே தவிர ஏமாந்து உள்ளே விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.