ETV Bharat / city

”வாய்ப்பு கிடைக்கும் போது திருப்பி அடிப்பேன்”- வைகோ - vaiko

சென்னை: ஜனநாயகம் குறித்து பேச பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

வைகோ
author img

By

Published : Jul 27, 2019, 6:03 PM IST

23 வருடங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின், தமிழ்நாடு திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சென்னை விமான நிலையத்தில் அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, “ 23 ஆண்டுகளுக்குப் பிறகு நான் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன். கேரள மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அனைவரும் என்னை வரவேற்றார்கள். நான் மோடியை விமர்சித்தாலும் நான் பேசும்போது அவர் மேஜையைத் தட்டி வரவேற்றது எனக்கு நெகிழ்ச்சியடைய வைத்தது.

கர்நாடகாவில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அவர்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கு அருகதையே கிடையாது. இன்னும் எத்தனை நாளைக்குக் கர்நாடகாவில் குதிரை பேர ஆட்சி நடக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கடுமையாகப் பேசினேன். இந்த மூன்று நாட்களில் பல மசோதாக்களை நிறைவேற்ற இருக்கிறார்கள். நாளை மாலை டெல்லி செல்கிறேன் பாராளுமன்றத்தில் முக்கியமாக முத்தலாக் மசோதா குறித்துப் பேச இருக்கிறேன்.

வைகோ பேட்டி

நீண்ட நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு சென்றாலும் கவலையோடு தான் சென்றேன். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை ஊக்குவித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று அப்துல் கலாம் நினைவு நாள் ஆகும். ’எதிரி அடிக்கும்போது தாங்கிக் கொண்டே இரு உனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது திருப்பி அடி’, என்று அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார். அதேபோல் நான் இருப்பேன் என அவர் தெரிவித்தார்.

Intro:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமானநிலையத்தில் பேட்டி

23 வருடங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று உரையாற்றி விட்டு சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சென்னை விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் வைகோ

23 ஆண்டுகளுக்குப் பிறகு நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பொறுப்பை ஏற்றுள்ளேன் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அனைத்து தலைவர்களுக்கும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்

கேரள மாநிலம் எம்பிகள் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அனைவரும் என்னை வரவேற்றார்கள் நான் எவ்வளவுதான் விமர்சித்தாலும் பிரதமர் மோடி நான் பேசும்போது மேஜையை தட்டி வரவேற்றது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

கர்நாடகாவில் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது இன்னும் எத்தனை நாளைக்கு கர்நாடகாவில் குதிரை பேர ஆட்சி நடக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடுமையாக பேசினேன் இந்த மூன்று நாட்களில் பல மசோதக்களை நிறைவேற்ற இருக்கிறார்கள்

நாளை மாலை டெல்லி செல்கிறேன் பாராளுமன்றத்தில் முக்கியமாக முத்தலாக் மசோதா குறித்து பேச இருக்கிறேன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்றாலும் கவலையோடுதான் சென்றேன் ஆனால் அத்தனையும் எம்பிகளும் என்னை ஊக்குவித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

இன்று அப்துல் கலாம் நினைவு நாள் எதிரி அடிக்கும்போது தாங்கிக் கொண்டே இரு உனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது திருப்பி அடி இதை நான் சொல்லவில்லை அப்துல்கலாம் சொல்லியிருக்கிறார் அதேபோல் நான் இருப்பேன் என அவர் தெரிவித்தார்

Body:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Conclusion:இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.