ETV Bharat / city

பொங்கல் பரிசு பணத்தில் ஆன்லைன் ரம்மி - தோற்றதால் கல்லூரி மாணவர் தற்கொலை! - மதுரவாயல் தற்கொலை

சென்னை: பொங்கல் பரிசு பணத்தில் தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடி கல்லூரி மாணவர் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

online rummy after losing college student commits suicide in chennai

author img

By

Published : Jan 11, 2021, 9:58 PM IST

சென்னை மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(20) என்பவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் இன்று வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த காவலர்கள் இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில், தமிழ்ச்செல்வன் வீட்டிலுள்ள நகையை எடுத்து பெற்றோருக்கு தெரியாமல் அடமானம் வைத்து நண்பர்களுக்கு செலவு செய்துவந்துள்ளார்.

அத்துடன் நேற்று(ஜன.10) பொங்கல் தொகுப்பு பரிசு ரூ.2500 வாங்கி அதில் ரூ.500 மட்டும் தந்தையிடம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை தொலைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது தாயார் திட்டுவார் என்னும் அச்சத்தில் தமிழ்ச்செல்வன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் செலவு செய்த பணத்தை எல்லாம் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விளையாடி இழந்ததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியை தடை செய்க! - நாராயணசாமி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.