சென்னை: கலைவாணர் அரங்கில் 2022ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவையின் கூட்டத் தொடரை நேற்று (ஜனவரி 5) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கிவைத்தார்.
அதன்படி, சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 6), நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது பற்றியும் சட்டப்பேரவை விதி எண் 110இன்கீழ் அறிவித்தார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களே நியமனம்
அத்துடன், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் வரும் மார்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது கொண்டுவரப்படும் எனச் சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
![பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனம் பற்றிய தீர்மானம் அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14113023_chen.jpg)
ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, பேசிய பாமகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி, மகாராஷ்டிரா போன்று ஆளுநர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஸ்டாலின், வரக்கூடிய மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தின்போது இதற்கான சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜி மீது திமுக அரசு திட்டமிட்டு புனையப்பட்ட பொய் வழக்கு...!'