பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழா, காந்தி சங்கல்ப யாத்திரை நிறைவு விழா ஆகிய மூன்று விழாக்களையும் இணைத்து பாஜக சார்பில் சென்னை ஷெனாய் நகரில் முப்பெரும் விழா பேரணி நடத்தப்பட்டது.
இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகை கவுதமி, பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரணியைத் தொடங்கி வைத்த நிர்மலா சீதாராமன், நிகழ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேலின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். ஷெனாய் நகர் புல்லா அவென்யூவில் தொடங்கிய பேரணி டி.பி.சத்திரம் மார்க்கெட் பகுதியில் நிறைவுபெற்றது.
மேலும் முக்கிய செய்திகள்:
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார்!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இடத்திற்கு புதிய மருத்துவர்கள் நியமனம்: அரசு அதிரடி!