சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக. 07) தலைமைச் செயலகத்தில் கலைஞரின் நினைவு நாளையொட்டி 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெறப்பட்ட 2,581 மொத்த மனுக்களில் 1,170 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நலத்திட்ட உதவிகள்
இவற்றிலிருந்து 15 பயனாளிகளை நேரில் அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவர்களில் ஆறு பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொறுத்தப்பட்ட ஸ்கூட்டர், இரண்டு பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
மேலும், ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலி, ஒரு பயனாளிக்குத் தையல் இயந்திரம், இரண்டு பயனாளிகளுக்கு திறன்பேசி, இரண்டு பயனாளிகளுக்குக் காதொலிக் கருவி, ஒரு பயனாளிக்குப் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின்போது தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ. இறைன்பு, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'கருணாநிதி நினைவுநாள்: தலமரக்கன்று நடும் திட்டம் தொடங்கிவைப்பு'