ETV Bharat / city

உள்ளாட்சி உங்களாட்சி 8 - நூறு நாள் வேலைத் திட்டம்

உள்ளாட்சி உங்களாட்சியின் கடந்த பகுதியில் கிராம வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பார்த்தோம். இந்தப் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டம் குறித்து பார்ப்போம்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்
author img

By

Published : Dec 2, 2019, 7:15 PM IST

ஒரு கிராமம் வளர வேண்டும் என்றால், அந்தக் கிராமத்தின் மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வளர வேண்டும். எனவே ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்ச வேலை அளிப்பதை உறுதிபடுத்தும் திட்டம், நூறு நாள் வேலைத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 224 வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் அன்றைய வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள பணி கண்காணிப்பாளர், வேலை நடக்கும் இடத்தின் மண் தன்மையை ஆராய வேண்டும்.

அதன் பிறகு ஒரு பணியாளர் எவ்வளவு ஆழம், அகலம் மற்றும் நீளத்திற்கு வேலை செய்ய வேண்டும் என கணக்கிட்டுக் கூறி, அதன் அடிப்படையில் அந்நாளின் இறுதியில் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், பல இடங்களில் இந்த வழிமுறை பின்பற்றப்படாததால் பணியாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பணியாளர்கள் முழு ஊதியம் பெற, ஒவ்வொரு நாளும் பணி அளவை அளந்து கொடுக்கும்படி பணி கண்காணிப்பாளரை வலியுறுத்தி, தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்பது அவசியம்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் பணி வழங்கப்படும். இதில் அவர்கள் பதிவு செய்தவுடன், அவர்களுக்கு ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டை நீல நிற அட்டை என அழைக்கப்படுகிறது.

இவர்கள் பணியில் இருப்பவர்களின் குழந்தைகளை பாதுகாத்தல், வேலை செய்பவர்களுக்கு குடிநீர் வழங்குதல் போன்ற சிறிய சிறிய வேலைகளை செய்யலாம். முக்கியமாக, இவர்கள் வேலைக்கு வந்தாலே பணி தள பொறுப்பாளருக்கு வழங்கும் ஊதியத்துக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் வேலை செய்பவருக்கு அவர் வேலை செய்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஊதியத்தை நிச்சயமாக வழங்க வேண்டும். அப்படி, இல்லையென்றால் அடுத்த நாளிலிருந்து அதாவது 16ஆவது நாளிலிருந்து ஊதியம் தரப்படும் நாள் வரை, 0.05% அபராதத்துடன் அவருக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

பலர் வேலை செய்திருக்கும்போது, அதில் சிலருக்கு மட்டும் ஊதியம் வராமல் இருக்கும். அப்படி இருந்தால் அவர்களது பெயர் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று அர்த்தம். மேலும், வேறு சில காரணங்களாகவும் இருக்கலாம்.

எனவே, பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி அட்டையின் ஜெராக்ஸ், வங்கி பாஸ் புக் ஜெராக்ஸ் ஆகியவற்றை இணைத்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும். அப்படியும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து கோரிக்கை வைக்கலாம்.

நூறு நாள் வேலைத் திட்ட பணிகளை மக்களே முடிவு செய்வார்கள். ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு வளர்ச்சி பணியையும் கிராம சபையில் முன்வைத்து மக்களின் ஒப்புதலைப் பெற்று, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் அடிப்படையிலேயே நூறு நாள் வேலை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:

உள்ளாட்சி உங்களாட்சி 7 - கிராம வளர்ச்சித் திட்டங்கள்

Intro:Body:

Ullatchi Ungalatchi series

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.