ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் ‘தள்ளிப்போகாதே’.
யூஏ சான்றிதழ்
இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். எம்கேஆர்பி நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ஆர். கண்ணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ள இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. 'தள்ளிப்போகாதே' படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.