சென்னை: குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வந்தவர்கள் சதீஷ் மற்றும் செந்தில்குமார். இவர்கள் நகைக்கடையின் வளாகத்திலேயே தங்கி வேலை பார்த்துள்ளனர்.
குரோம்பேட்டை அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சிற்றுந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த செந்தில்குமார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.
சிற்றுந்தை ஓட்டி வந்த இளையராஜா (26) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Manikka Vinayagam: காற்றில் கரைந்த கம்பீரக் குரலோன் மாணிக்க விநாயகம்