ஆழ்வார் திருநகர் இந்திரா நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (49). கொத்தனார் ஆக பணிபுரிந்துவந்த இவர், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபடுவது செய்வது வழக்கம். அதேபோல் நேற்றும் குடித்துவிட்டு வந்த ஆறுமுகம், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட ஆறுமுகம், நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், மனைவி சரஸ்வதி ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளார்.
அப்போது மின்விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் ஆறுமுகம் தொங்கிக்கொண்டிருந்தது கண்டு அவர் அலறியுள்ளார். பின்னர் கதவை உடைத்துக்கொண்டு அவரது மகன் உள்ளே சென்று பார்த்தபோது, ஆறுமுகம் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்நிகழ்வு குறித்து, விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதேபோல் தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சேர்ந்தவர் ரவிகாந்த் (55). தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக இருந்து வந்த இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே ரவிகாந்த் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரின் மகள் காலையில் எழுந்து பார்த்தபோது தந்தை ரவிகாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னர் அங்கு வந்த தேனாம்பேட்டை காவல் துறையினர் உடலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குறிப்பு: எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணங்களிலிருந்து மீள்வதற்கு, தனியார் தற்கொலை எண்ண தடுப்பு அமைப்பான சினேகாவின் ’044 -24640060’ ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். அதைத்தவிர, தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் எண் ’104’ க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
இதையும் படிங்க: வாய் பேச முடியாத காதல் ஜோடி தற்கொலை - வெளியான வீடிேயா