ETV Bharat / city

வன்னியர் உள் இட ஒதுக்கீடு தேர்தலுக்கான கண் துடைப்பு போல தெரிகிறது  - டிடிவி தினகரன்!

தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெறுவதற்காக அரசு அவசர கதியில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

TTV Dinakaran tweet, டிடிவி தினகரன் ட்வீட்
TTV Dinakaran tweet
author img

By

Published : Feb 27, 2021, 9:11 PM IST

சென்னை: வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது.

எம்பிசி பிரிவில் இருக்கும் 109 சமூகங்களில் எந்தச் சமூகமும் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவது தான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். எதற்காக இந்த அவசர கோலம்? வன்னியர் உள் இட ஒதுக்கீட்டினை ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் குழு என்ன ஆனது? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப் போல இதுவும் ஒரு கண் துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.