சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டிவி தினகரன் தலைமையில் கட்சியின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக, நேற்று (ஏப்ரல்.16) கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்த முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று(ஏப்ரல்.17) நடைபெற்றது.
இதில் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்துதல் குறித்தும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி ஹனுமன் பேரணி கலவரம்: 14 பேர் கைது, நிலமை என்ன?