மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கூடாது எனவும், பொதுச்சின்னம் ஒதுக்கலாம் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இது பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ஆர்.கே.நகரில் 21 வது ஆளாக குக்கர் சின்னம் பெற்றாலும் கூட மக்கள் தன்னை வரவேற்றதாகக் கூறினார்.
மேலும், குக்கர் சின்னம் தனக்கு ஒதுக்கியதால்தான் அதனை கேட்டதாகவும், ஆனால் உச்சநீதிமன்றம் குக்கர் சின்னத்தை மறுத்துள்ளதால் தேர்தல் ஆணையம் எந்த சின்னம் ஒதுக்குகிறதோ அதே சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
40 தொகுதிகளில் 40 சின்னம் கொடுத்தாலும் வெற்றி நிச்சயம் எனவும், இரட்டை இலை வழக்கைத் தேர்தலுக்கு பின்பு பார்த்துக்கொள்வதாகவும் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.