ETV Bharat / city

மழைநீர் வடிகால்வாயில் விழுந்த ஐடி ஊழியர்..தொடையில் 35 தையல்களுடன் சிகிச்சை..

ஆதம்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் விழுந்த ஐடி ஊழியர் கம்பி குத்தியதில் படுகாயமடைந்த நிலையில் அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 20, 2022, 4:45 PM IST

சென்னை: இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற ஐடி ஊழியர் வடிகால்வாய்க்காக தோண்டப்பட்ட 15 அடி பள்ளத்தில் விழுந்தநிலையில் தற்போது தொடையில் 35 தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் வாசுதேவன்(33) என்பவர் தனது வீட்டின் முன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய வடிகால்வாய் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி பள்ளத்தில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மழைநீர் வடிகால்வாயில் விழுந்த ஐடி ஊழியர்

இதில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் பழைய மழைநீர் வடிகால்வாய் மூடப்படாமல் திறந்த வெளியில் விடப்பட்டிருந்தது. இன்று (செப்.20) இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற வாசுதேவன் நிலைதடுமாறி சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைக்குப்புற விழுந்து படுகாயமடைந்தார்.

இதனால் தலை, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதோடு, வலது தொடையில் கம்பி ஒன்று குத்தி கிழித்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாசுதேவனைத் தூக்கி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது 35 தையல்கள் போடப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: லஞ்சம் கேட்டு பெண் மீது தாக்குதல் நடத்திய போலீஸ்... ஆபாசமாக பேசுவதாக பெண் வேதனை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.