சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள், இணை இயக்குநர்கள் பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளனர்.
இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக லதா பூர்ணம், திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநராக பாஸ்கரன், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி முதல்வராக எழிலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோயம்புத்தூர் கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குனராக உலகி , ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வராக கலைச்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் ( கல்லூரிக்கல்வி) அருள் அந்தோணி, சேலம் மகளிர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக ரமா நியமிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை - மா. சுப்பிரமணியன்