1.சென்னைக்கு ரெட் அலர்ட்: களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னையில் பெய்த தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 7) நேரில் பார்வையிட்டு, மழை வெள்ளத்தை வெளியேற்றத் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
2.செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள் உள்ளன. இதில் இரண்டாவது மதகு மட்டும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3.மழை வெள்ள பாதிப்பில் மக்களுடன் ஸ்டாலின்!
நேற்றிரவில் இருந்து பெய்துவரும் கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டேரி பாலம், பாடி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அவர்களுடன் இன்று பார்வையிட்டார்.
4.மிதக்கும் சென்னை: மீண்டும் ஒன்றிணைய வரும்படி திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு
அரசு அலுவலர்களுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5.வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வெள்ள பாதிப்புகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
6.நீண்ட நேர சந்திர கிரகணம்
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேரச் சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழவுள்ளது.
7.அனுஷ்காவின் 48ஆவது படம் என்ன தெரியுமா?
அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று அவரது 48ஆவது படத்தை அறிவித்தது யூவி கிரியேஷன்ஸ். இப்படத்தை மகேஷ் பாபு இயக்குகிறார்.
8.பொதுமக்கள் முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
9.பாஜக தேசிய செயற்குழு கூட்டம் - தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி மையத்தில் வைத்து பாஜக செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தொடக்க உரையாற்றினார். மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
10.நீர் நிலைகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் :தண்ணீர் மனிதர் வேண்டுகோள்
தமிழ்நாடு அரசு தானாக முன்வந்து மதுரையில் உள்ள நீர்நிலைகளை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.