ஸ்டாலின் கடைசிவரை முதலமைச்சர் ஆக முடியாது- மு.க. அழகிரி
ஸ்டாலினால் கடைசிவரை முதலமைச்சர் ஆக முடியாது என்றும்; திமுக, கருணாநிதியை மறந்த திமுகவாக மாறிவிட்டது என்றும் மு.க.அழகிரி விமர்சித்துள்ளார்.
மணநாளில் படுகாயமடைந்த பெண் - எந்த எதிர்பார்ப்புமின்றி ஏற்றுக்கொண்ட மணமகன்!
திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பாகவே கல்யாண பெண் விபத்தில் சிக்கி படுகாயடைந்தார். இதில் பெண்ணால் படுக்கையை விட்டு எழுந்து நடக்க முடியாத சூழல் இருந்தது. அதனால், திருமணம் நடக்காது எனப் பெண் வீட்டார் நினைத்திருந்த வேளையில், படுக்கையிலிருந்த அப்பெண்ணை மாப்பிள்ளை ஏற்றுக்கொண்டார். உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.
பெரியார், அண்ணா, திராவிட இயக்கம் குறித்து குரூப் 1 தேர்வில் இடம்பெற்ற கேள்விகள்
தந்தை பெரியாரைப் பற்றிய 8 கேள்விகள், தமிழ்நாடு சீர்திருத்த இயக்கங்கள், தமிழ் இலக்கியம், உள்ளிட்டவைகளிலிருந்து குரூப்-1 தேர்வில் கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
விற்பனையில் 17.5% உயர்வைக் கண்ட டிவிஎஸ்!
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மொத்தமாக தனது விற்பனையில் 17.5 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது. அதேபோல இருசக்கர வாகன விற்பனையில் 20 விழுக்காடு வளர்ச்சியும், உள்நாட்டு விற்பனையில் 13 விழுக்காடு அளவு வளர்ச்சியையும் சந்தித்துள்ளது.
ஐஎஸ்எல்:புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஏடிகே மோகன் பாகன்!
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் 11 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
பலூசிஸ்தானில் இருந்து 11 நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்களை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 4 பேர் படுகயாமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கும் சம்பங்கள் பாகிஸ்தானில் அதிரித்து வருகிறது.
ஜனவரி இறுதிவரை ஜெர்மனியில் ஊரடங்கு
பவேரியா ஆளுநர் மார்கஸ் சோடர், ஜனவரி இறுதிவரை ஊடரங்கு தொடரும், பள்ளிகளைத் திறக்க எதுவும் அவசரமில்லை என தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் சர்வதேச ஆயுர்வேத விழா: இணை அமைச்சர் முரளிதரன்
சர்வதேச ஆயுர்வேத விழா வரும் மார்ச் 12 முதல் 19ஆம் தேதிவரை நடைபெறும் என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் முப்படைகளின் தலைமை தளபதி ஆய்வு!
அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்றுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் 114 நபர்களுக்கு கரோனா!
விடுதிகளில் பணிபுரியும் 125 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி சென்னையில் உள்ள பெரிய நட்சத்திர விடுதியான ஐடிசி கிராண்ட் சோழாவில் பணிபுரியும் ஒரு நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு பணிபுரியும் நபர்களுக்கு பரிசோதித்ததில் படிப்படியாக கரோனோ பாதிப்பு அதிகரித்தது.