1. எடப்பாடி வெற்றிக்கு பாடுபட்டவர் திமுகவில் இணைந்தார்!
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதி அதிமுகவின் தேர்தல் பொறுப்பாளராக இருந்த செல்லதுரை திமுகவில் இணைந்தார்.
2. கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை: அரசின் உத்தரவாதம் ஏற்பு!
தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
3. தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிட வேண்டும் - முதலமைச்சர் அறிவுறுத்தல்
தகவல்களை விரைந்து பெறுவதன் மூலம், நாட்டில் தகவல்தொழில்நுட்பத்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
4. 'அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக்கூடாது' - ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் இரங்கல்
அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு நேர்ந்ததைப்போல இனி யாருக்கும் நிகழக்கூடாது என அவரின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
5. 'புதிய ஒளிப்பரப்பு சட்ட திருத்த மசோதா திரைத்துறையை பாதிக்கும்' - நடிகர் கார்த்தி
புதிய ஒளிப்பரப்பு சட்ட திருத்த மசோதா திரைத்துறையை பாதிக்கக்கூடியது என்பதால் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு கருத்து சுதந்திரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.
6. இறந்ததாக கூறப்பட்டு பிழைத்த குழந்தை மரணம்
கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட இருந்த குழந்தையின் உடலில் திடீரென அசைவுகள் தென்பட்டது.
7. சோனியா காந்தியை சந்திக்கிறார் கேப்டன் அமரீந்தர் சிங்!
பஞ்சாப்பில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை, மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசுகிறார்.
8. கர்ப்பிணிகளுக்கு கோவிட்- 19 தடுப்பூசி செலுத்தலாமா?
ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கர்ப்பணிகள், 35 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள், கைகால்களில் ரத்தம் உறையும் அறிகுறி உள்ளவர்களுக்கு கோவிட் 19 பாதிப்பிற்கு பிறகான தாக்கம் அதிகமாக இருக்கும். அதே போல, கருத்தரித்திருக்கும் போது கர்ப்பிணி ஒருவர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால், பிரசவத்திற்கு பின்னர் விரைவாக அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
9. புதிய சட்டப்பேரவை வளாகம்: ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டு விழா!
புதுச்சேரி: புதிய சட்டப்பேரவை வளாகத்திற்கு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்கு பின்னர் உள்துறை அமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருப்பதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
10. சோனியில் திட்டம் இரண்டு
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திட்டம் இரண்டு திரைப்படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.