ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

author img

By

Published : Oct 17, 2021, 5:24 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

1.2003இல் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாய் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு

விருத்தாசலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2.கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 12ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணிகள்

கேரள மாநிலம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

3.அதிமுக பொன் விழா..! கொடியேற்றி கொண்டாட்டம்

அதிமுக தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 50 ஆண்டு தொடக்க நாளான இன்று கட்சி கொடியேற்றி அதிமுக தொண்டர்கள் கொண்டாடினர்.

4.தங்கம் விலை ரூ. 400 குறைவு; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.400 வரை விலை குறைந்து, ரூ. 35 ஆயிரத்து 720-க்கு விற்பனையானது. இதனால், இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

5.மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

மழலையர் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சருடன் நாளை ஆலோசனை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

6.ராமநாதபுரத்தில் உள்வாங்கிய கடல்!

ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் கடல் உள்வாங்கியது. இந்நிலையில், கடலில் தரை தட்டி நின்ற படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

7.'ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது' - சி.வி.சண்முகம் ஆவேசம்!

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

8.மகன் துரை வையாபுரிக்கு பதவி? - வைகோ சொன்ன பதில்

தனது மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்கவேண்டும் என சில மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றிவுள்ளதாகவும், இதற்கான முடிவு அக்.20 ஆம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

9.நவராத்திரி கொண்டாட்டம்: புதுச்சேரியில் கண்கவர் ’தாண்டியா’ நடனம்!

புதுச்சேரி: நவராத்திரி உத்சவ் நிகழ்ச்சியில் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் கலந்துகொண்டு ஆடிய தாண்டியா நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

10.பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோரை சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் சென்னையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.