ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

3 PM
3 PM
author img

By

Published : Mar 31, 2021, 3:12 PM IST

1. ’ஊர்வலம் செல்வதைத் தவிருங்கள்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசுவதால், திறந்தவெளியில் வேலை செய்வதையும் ஊர்வலம் செல்வதையும் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

2. தேர்தலுக்காக 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 14 ஆயிரத்து 215 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

3. ஏப். 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் விதித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

4. ’கண்ணியத்துடன் பேச வேண்டும்’ - ஆ. ராசாவுக்கு காங்கிரஸ் அறிவுரை!

சென்னை: பொதுவெளியில் தலைவர்கள் பேசும்போது கண்ணியத்துடனும் கவனமாகவும் பேச வேண்டும் என ஆ. ராசா குறித்த கேள்விக்கு காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பதிலளித்துள்ளார்.

5. ’ராதாரவி மீது மட்டும் உடனடி நடவடிக்கை’ - ஆ.ராசா விவகாரம் குறித்து ஜெயக்குமார்

சென்னை : ராயபுரம் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார், “பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு பேசிய ராதாரவி மீது உடனடி நடவடிக்கை எடுத்த திமுக, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார்.

6. இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்குமா?

இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியைப் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

7. வாளால் கேக் வெட்டிக் கொண்டாட்டம்: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி: அரசு சட்டக் கல்லூரியில் வாளால் கேக் வெட்டிக் கொண்டாடிய கல்லூரி பேராசிரியர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

8. ’மூத்தவர்களை ஓரம்கட்டி விட்டு வந்தவர் மோடிதான்’ - உதயநிதி பேச்சு

”மூத்தவர்களை ஓரம் கட்டிவிட்டு குறுக்கு வழியில் நான் வந்தேன் என மோடி குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் குஜராத் முதலமைச்சராக இருந்து எத்தனை பேரை ஓரம் கட்டிவிட்டு வந்தார் எனத் தெரியுமா? அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, வெங்கையா நாயுடு என நீண்டுகொண்டே செல்கிறது பட்டியல்” - உதயநிதி ஸ்டாலின்

9. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கிடையே இருக்கும் கால இடைவெளி ஏன் எனத்தெரியுமா?

கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையே இருக்கும் கால இடைவெளியின் காரணம் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்வோம் வாங்க!

10. வாக்கா... வைரஸா... காவல் துறையினரின் தபால் வாக்குப்பதிவில் காணாமல் போன கரோனா விதிகள்!

சென்னை: காவல் துறையினர் தபால் வாக்குப்பதிவு காலதாமதத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.