ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

t 3 PM
t 3 PM
author img

By

Published : Mar 30, 2021, 3:16 PM IST

1. வன்னியர் உள்இடஒதுக்கீடு நிரந்தரமானது, அதை நீக்க முடியாது- மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

வன்னியர் உள்இடஒதுக்கீடு நிரந்தரமானது, அதை நீக்க முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

2. ’பெருவாரியான வித்தியாசத்தில் ஜெயிக்க வையுங்கள்’ - கடைகடையாக ஏறி இறங்கும் குஷ்பு!

ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு, தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு அத்தொகுதியில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

3. பிரதமரின் பரப்புரைக் கூட்டத்திற்கு சென்ற சபாநாயகர், அமைச்சரது வாகனங்கள் விபத்து

திருப்பூர்: பிரதமர் மோடியின் பரப்புரைக் கூட்டத்திற்கு சென்ற சபாநாயகர் தனபால், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பயணித்த வாகனங்கள் தாராபுரம் அருகே விபத்தில் சிக்கின.

4. ’மக்களுடன் சாதி, மதம் கடந்த பரஸ்பர உறவு’ - நயினார் நாகேந்திரன் உருக்கம்!

திருநெல்வேலி: கடந்த 20 ஆண்டுகளாக மதம், சாதி என்ற எவ்வித பாகுபாடுகளும் காட்டாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் பரஸ்பரம் உறவு வைத்துள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

5. அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக களமிறங்கும் சிவப்பு சிந்தனைக்காரர்கள்!

27 அமைச்சர்களில் 24 அமைச்சர்களுக்கு எதிராக திமுக களம் காணவுள்ளது. அதிமுக அமைச்சர்களை எதிர்க்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை காண்போம்...

6. கனவில் வரும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால்? #விதார்த்25

நடிகர் விதார்த் நடிக்கும் 25ஆவது திரைப்படத்திற்கு 'கார்பன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

7. பஞ்சாப் பாடகர் தில்ஜன் சிங் கார் விபத்தில் மரணம்!

பிரபல பஞ்சாப் பாடகர் தில்ஜன் சிங் கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

8. வேட்பாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கரோனா பரிசோதனையை கட்டாயமாக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர் அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

9. 'எங்களை சுடுகாட்டில் போட்டுச் செல்லுங்கள்' - சீமான் ஆதங்கம்

சென்னை: மாற்றத்திற்காக, வாக்களிக்க விரும்பி வாக்களியுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

10. காங்கிரசுக்கு ஆதரவாக பாட்டுபாடி களத்தில் இறங்கிய திமுக

ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து, ஸ்ரீபெரும்புதூர் திமுக ஒன்றிய செயலாளர் நா. கோபால் பாட்டு பாடி பொது மக்களிடம் வாக்கு சேகரித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.