ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @1PM - சென்னை

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்..

நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 3, 2021, 12:58 PM IST

1. அயோத்திதாசருக்கு மணிமண்டபம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்துவருகின்றன. அதன்படி இன்று வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.

2. மாணவிகளுக்கு கரோனா - பீதியில் பெற்றோர்கள்

நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியையும், பீதியையும் உருவாக்கியுள்ளது.

3. சென்னையில் மின் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் இன்று (செப். 3) பராமரிப்பு பணி காரணமாக ஒருசில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.

4. மெய்நிகர் மாரத்தானில் 19,596 பேர் பங்கேற்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கருணாநிதி நினைவு பன்னாட்டு இரண்டாவது ஆண்டு மெய்நிகர் மாரத்தானில் 19 ஆயிரத்து 596 பேர் பங்கேற்றதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5. கூகுள் பே செயலியில் நிலையான வைப்புத்தொகை சேவை அறிமுகம்

எக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியுடன் கூகுள் நிறுவனம் கூட்டணி அமைத்து தனது கூகுள் பே செயலி (Google Pay) நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

6. குடிபோதையில் பிரபல சூழலியல் செயற்பாட்டாளரை தாக்கிய கும்பல்: போலீஸ் விசாரணை

கர்நாடகா மாநிலத்தில் சூழலியல் செயற்பாட்டாளரான டி.வி.கிரிஷ், போதை கும்பலால் கடுமையாகத் தாக்கப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

7. சீனாவில் எதிரொலிக்கும் கீழடியின் பெருமை

கீழடியின் பெருமையை சீன நாட்டின் யுன்னான் மின்சூ பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் கிக்கி ஜாங் தனது மாணவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

8. பாரா ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் வாழ்த்து!

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

9. வெண்கலம் வென்றார் அவனி லெகாரா; மேலும் ஒரு வரலாற்று சாதனை

பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன், 10 மீட்டர் பிரிவில் லெகாரா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

10. ரஷ்யாவிலிருந்து அஜித் சென்னை திரும்பாதது ஏன்?

நடிகர் அஜித் ரஷ்யாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏன் சென்னை திரும்பவில்லை என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.