ETV Bharat / city

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11AM - etvbharat

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச்சுருக்கம்

author img

By

Published : Jul 4, 2021, 12:34 PM IST

1. 'கரோனாவை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

"கரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3. பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலன் காக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 6 ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4. மதுரையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக துணை நடிகை புகார் அளித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் மதுரையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5. முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மறைவு

மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

6. ட்விட்டர் தளம் மத வெறுப்பை பரப்புவதாக மேலும் ஒரு புகார்!

மத வெறுப்பை பரப்புவதாகக் கூறி ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஸ்வரியின் மீதும், என் ஜி ஓ நிறுவனம் ஒன்றின் மீதும் டெல்லி சைபர் பிரிவு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

7. 'ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஸ்வீட் பார்சல்'

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டிற்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

8. சிறந்த பொருளாதார வல்லுநர் குழு அமைத்த முதலமைச்சர் - கனிமொழி எம்பி

தமிழ்நாட்டை நிதி நெருக்கடியிலிருந்து மீட்க உலகளவில் பாராட்டு பெற்ற வல்லுநர் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

9. மேற்கு வங்கத்தில் தனியார் பேருந்துகளை இயக்க மறுப்பு: அரசு பேருந்துகளில் முண்டியடித்து பயணிக்கும் மக்கள்!

மேற்கு வங்கத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் அரசு பேருந்துகளில் மக்கள் முண்டியடித்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

10. மெஸ்ஸியின் கலக்கல் ஆட்டம் - அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா

மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் அர்ஜென்டினா அணி இக்குவேடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.