ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம் - 9 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jun 29, 2021, 9:08 PM IST

1. தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. செயல் வீரர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்

ஐபிஎஸ்தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மிடுக்கான தோற்றமும் முறுக்கு மீசையும் கொண்ட செயல் வீரர் சைலேந்திர பாபு கடந்துவந்த பாதை...

3. கரோனா: தமிழ்நாடு அரசின் மூன்றாம் கட்ட ஆய்வு

சென்னை: கரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நபர்களுக்கு உருவாகியுள்ளது என்பதை கணக்கிடுவதற்கான தமிழ்நாடு சுகாதாரத் துறையின் மூன்றாவது கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது.

4. காதலிப்பது தவறில்லை.. ஆனால்... காவல் உதவி ஆய்வாளர் ஆனி சிவா கடந்து வந்த பாதை!

படிக்கும் போதே காதல், திருமணம், எட்டு மாத கைக்குழந்தையுடன் தவிக்க விட்ட கணவர் என வாழ்க்கை முழுவதும் வறுமையில் உழன்று கடற்கரையில் எலுமிச்சை சாறு விற்று பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர் ஆனி சிவா. இன்று நாடே போற்றும் வகையில் காவல் உதவி ஆய்வாளர் ஆக சாதித்துள்ளார். அவர் கடந்துவந்த பாதை குறித்து பார்க்கலாம்.

5. 'முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதியுடன் சிறையில் இல்லை'

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதியுடன் சிறையில் உள்ளார் என்பது முற்றிலும் தவறான தகவல் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

6. பூஞ்சைகளின் வரிசையில் கரோனா நோயாளிகளை தாக்கத் தொடங்கியுள்ள ’சைட்டோமேகுலோ’ வைரஸ்!

புதுடெல்லி: கரோனா நோயாளிகள் கறுப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ’சைட்டோமேகுலோ’ (Cytomegalovirus) வைரஸ் பாதிப்பு நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளன.

7. போஸ்ட் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பிய ரமேஷ் பொக்ரியால்

கரோனா தொற்றின் பிந்தைய சிக்கல்கள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இன்று வீடு திரும்பினார்.

8. 59 சீன செயலிகளுக்கு ஆப்பு- ஓராண்டு நிறைவு!

சிறுவர்களின் உயிரோடு விளையாடிய பப்ஜி, பல குடும்பங்களில் பிரச்சினையை ஏற்படுத்திய டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து இன்றுடன் ஓராண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. அந்த 59 சீன செயலிகள் என்னென்ன என்பது குறித்தும் பார்ப்போம்.

9. ஜான் விக் 4ஆம் பாகம் ஆரம்பம்!

சேட் தகல்ஸ்கி ஒரு ஸ்டண்ட் கலைஞர். அவர் இயக்குநர் அவதாரம் எடுத்த ‘ஜான் விக்’ திரைப்படம் முழுக்க முழுக்க ஸ்டண்ட் காட்சிகளுக்காகவே ரசிக்கப்பட்டது. தற்போது நான்காம் பாகத்தையும் அவரே இயக்குகிறார்.

10. அக்டோபரில் தொடங்குகிறது டி20 உலகக்கோப்பை திருவிழா!

டி20 உலகக்கோப்பை 2021 ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.