ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM - TOP 10 NEWS 3 PM

3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

3 PM
3 PM
author img

By

Published : Mar 3, 2021, 4:08 PM IST

1. அமமுகவை இணைப்பது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும்- சி.டி. ரவி

அதிமுக - அமமுக இணைவது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும் எனத் தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

2. சனத்குமார் ஆறு ஆக்கிரமிப்பு - நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு ஆணை!

சென்னை: சனத்குமார் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. தேர்தல் விதிமுறையை மீறிய நாம் தமிழர் கட்சி

திருவாரூர்: தேர்தல் விதிமுறையை மீறி விளம்பரம் செய்த அரசியல் கட்சியின் பிரமுகர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

4. அமமுகவின் எதிர்காலம்... அதிரடி அரசியலை தொடங்கிய தினகரன்

எம்எல்ஏ, எம்பி, பொருளாளர், துணை பொதுச்செயலாளர், அதிமுகவின் அதிகார மையம், அதிரடியும் அமைதியும் கலந்த அரசியல் தலைவர் அமமுக பொதுச்செயலாளர் தினகரன். தமிழ்நாட்டில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு முதலமைச்சர்களை உருவாக்கியதன் பின்னணியில் இருந்தவர்.

5. நடத்தை விதிகளை மீறியதாக திமுக நிர்வாகிகள் மீது வழக்கு!

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி சுவரில் போஸ்டர் ஒட்ட முயன்ற திமுக நிர்வாகிகள் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

6. தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் நம்பிக்கை அவசியம்: பிரதமர் மோடி

தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்களின் தன்னம்பிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

7. 'வெளிப்புறத் தலையீடுகளால் சிரியாவில் வளர்ந்துள்ள பயங்கரவாதம்!'

சிரியாவில் 11 ஆயிரம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நிலைகொண்டிருப்பது குறித்து ஐநா பாதுகாப்புச் சபையில் கவலையை வெளிப்படுத்தியுள்ள இந்தியத் தூதர் நாகராஜ் நாயுடு, வெளிப்புற நடிகர்களால் சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

8. திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்த பெண் மென்பொறியாளர் மீது தாக்குதல்

ஹைதராபாத்: திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்த பெண் மென்பொறியாளரை கத்தியால் தாக்கிய இளைஞரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

9. அனுராக் காஷ்யப், டாப்ஸிக்குச் சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு

இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

10. கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராணுவ மருத்துவமனையில் முதல் தடுப்பூசி டோஸை செலுத்திக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.