ETV Bharat / city

தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு! - Puducherry

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியனில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 19) நிறைவு பெறுகிறது.

சட்டப்பேரவை தேர்தல் 2021 தமிழ்நாடு புதுச்சேரி வேட்புமனு தாக்கல் Last day to file nominations in Tamil Nadu and Puducherry Tamil Nadu Puducherry nominations in Tamil Nadu

author img

By

Published : Mar 19, 2021, 10:20 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இதுவரை 4 ஆயிரம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 12ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கியதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் திங்கள்கிழமை பெருமளவில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இதுவரை 3 ஆயிரத்து 997 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 332 பேர் ஆண்கள், 664 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை ஆகியோர் ஆவார்கள்.

வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 19) மாலை 3 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பபெற வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகும்.

இதையும் படிங்க: வாக்கிங், ஜாக்கிங், பை ஸ்டார் ஹோட்டல், ஆட்டோ சவாரி- கமலை பங்கம் செய்த வானதி சீனிவாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.