ETV Bharat / city

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலும் முறைகேடா? - தேர்வர்கள் புகார் - சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலும் குளறுபடி நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

complaint
complaint
author img

By

Published : Feb 3, 2020, 2:14 PM IST

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8,826 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதி அதில் 47 ஆயிரம் பேர் தேர்வாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்து, இன்னும் ஓரிரு நாள்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி, தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுப் பிரிவு ஃபார்ம் 3 சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

இந்த ஃபார்ம் 3 சான்றிதழானது பல்கலைக்கழகங்கள் மூலம் மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கும் தேர்ச்சி சான்றிதழ் ஆகும். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள், தற்பொழுது நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, விளக்கம் கேட்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு இன்று வந்த 30-க்கும் மேற்பட்ட தேர்வர்கள், அலுவலர்களைச் சந்திக்க இயலாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலும் முறைகேடா?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 2017-18ஆம் ஆண்டுகளில் இதே சான்றிதழ்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சிப் பெற்று பணியிலும் சேர்ந்துள்ள நிலையில், இந்தாண்டு ஃபார்ம் 3 சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதாகத் தங்களுக்குக் கிடைத்த மின்னஞ்சல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கான காரணத்தை அறிய இயலாமல் வேதனையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தங்களுக்கான தகுந்த பதிலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வழங்கவேண்டும், இல்லையெனில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் கூறினர்.

இதையும் படிங்க: தேர்வு முறைகேடு - அடுத்தடுத்து சிக்கும் குற்றவாளிகள்!

Intro:Body:*டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டை தொடர்ந்து டி.என்.யு.எஸ்.ஆர்.பி யிலும் முறைகேடா?*

டி.என்.பி.எஸ்.சி யை தொடர்ந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திலும் குளறுபடி என புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8826 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை கடந்த ஆகஸ்டு மாதம் 8 ஆம் தேதி நடத்தியது. இந்த தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதி அதில் 47 ஆயிரம் பேர் தேர்வாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்து இன்னும் ஓரிரு நாட்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் கிராமபுற மாணவர்களின் விளையாட்டுப் பிரிவு ஃபார்ம் 3 சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அனுப்பியுள்ளது. இந்த ஃபார்ம் 3 சான்றிதழானது பல்கலைக்கழகங்கள் மூலம் மாநில தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கும் தேர்ச்சி சான்றிதழ் ஆகும். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ்கள் தற்பொழுது நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான தேர்வர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வந்த 30 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளை சந்திக்க இயலாததால் விரக்தியடைந்து பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேட்டியளித்த தேர்வர் ராம் கிஷோர், கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் இதே சான்றிதழ்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சிப் பெற்று பணிக்கும் சேர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஃபார்ம் 3 சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதாக தங்களுக்கு கிடைத்த மின்னஞ்சல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கான காரணத்தை அறிய இயலாமல் 60 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 8 மாதங்களாக இதற்காக கடுமையாக உழைத்து அனைத்திலும் தேர்ச்சி பெற்று இறுதிப் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்களுக்கு தகுந்த பதிலை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வழங்கவேண்டும் எனவும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் முறையிட்டு அறிவிப்புக்கு தடைகோர முடிவெடுத்துள்ளதாகவுக் அவர் கூறினார்.

(பேட்டி - ராம் கிஷோர் - இரண்டாம் நிலை காவலருக்கு தேர்ச்சி பெற்று நிராகரிக்கப்பட்ட தேர்வர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.