ETV Bharat / city

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்களுக்கான தேர்வு தேதி மாற்றம் - TNPSC அறிவிப்பு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

இந்தாண்டு 2022-க்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்களுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 15, 2022, 8:03 PM IST

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்களுக்கான அரையாண்டு, மொழித்தேர்வு(அக்டோபர்-2022 எழுத்துத்தேர்வு) மற்றும் நேர்காணல் தேர்வு நடக்க இருந்த தேதி மாற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (செப்.15) அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசுப்பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்களுக்கு அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு அக்.11 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையும், 20ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணங்களுக்காக இந்தத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் செய்யப்படுகின்றன. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு வரும் நவ.1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மற்றும் 10ஆம் தேதியும் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கால அட்டவணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெற்ற தாயால் கைவிடப்பட்ட பார்வையற்ற பெண் குழந்தை; நிதிப்பொறியாளராக உருவாக்கிய வளர்ப்புத்தாய்... இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.