சென்னை: துணை ஆட்சியர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 66 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வினை சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 37 மையங்களில் 3687 பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 3,687 பேர் முதன்மைத் தேர்வை எழுதுகின்றனர். முதல்நாளான இன்று(மார்ச்.04) முதல்தாளுக்கான தேர்வும், நாளை 2-ஆம் தாளுக்கான தேர்வும், நாளை மறுநாள் 3-ஆம் தாளுக்கான தேர்வும் நடைபெறுகிறது.
கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு நடைபெறுகிறது.
மேலும் தேர்வு நடைபெறும் மையத்தில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்காத வகையில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த உடன், விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மறைமுக தேர்தல் முடிவுகள் : சென்னை மாநகராட்சியின் 340 ஆண்டு கால வரலாற்றில், இது ஒரு மைல்கல்