சென்னை: தமிழ்நாட்டில் மாநில மகளிர் புதிய கொள்கை உருவாக்குவது தொடர்பாக, உறுப்பினர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நியாயமான உரிமைகள்
அதில், சமூகத்தில் பெண்கள் மேலான நிலையை அடையவும், அவர்களின் நியாமான உரிமைகள் பெற்றுத் தரவும், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கண்காணிக்கவும், புதிய மாநில மகளிர் கொள்கை உருவாக்கப்படும் என்று முன்னதாக, சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கையில், அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்திருந்தார்.
குழுத்தலைவர் ஜி.என் கிருபா
இந்நிலையில், தமிழ்நாடு அரசானது புதிய மாநில மகளிர் கொள்கை உருவாக்குவதற்கு என்று சில உறுப்பினர்களை நியமனம் செய்து அரசாணையினை வெளியிட்டுள்ளது.
மேலும், இதில் மாநில திட்டக்குழுவைச் சேர்ந்த ஜி.என் கிருபாவை தலைவராகவும், டாக்டர் ஆர்.கோபிநாத், டாக்டர். சிவக்குமார், ஆர்.வி.ஷ ஜீவனா, டாக்டர் சுஜாதா, ராம ஜெயம் ஆகியோரை உள்ளடக்கியக் குழுவினை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குழு பெண்களின் சமவாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் மேம்பாடு, பாதுகாப்பான வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது தொடர்பானப் பணிகளை செய்யும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இரு மேம்பாலங்களை திறந்துவைக்கும் முதலமைச்சர்