ETV Bharat / city

2 நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

நாளை மறுதினம் (ஜனவரி 7) வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் எனவும் முதலமைச்சர் பதிலுரை முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

TN Speaker Appavu, சபாநாயகர் அப்பாவு
TN Speaker Appavu
author img

By

Published : Jan 5, 2022, 5:39 PM IST

Updated : Jan 5, 2022, 7:28 PM IST

சென்னை: ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜனவரி 5) தொடங்கியது.

காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவைக்கூட்டம் தொடங்கியது.

ஆளுநர் உரைக்குப் பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அரசு கொறாடா கோவி. செழியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

நேரடி ஒளிப்பரப்புக்கு சோதனை ஓட்டம்

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, சோதனை ஓட்ட முறையில் ஒளிபரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வினா-விடை நேரம், முதலமைச்சர் பதிலுரை உள்ளிட்ட நிகழ்வுகள் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படும்

ஆளுநர் உரைக்கு நன்றித்தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாளை (ஜனவரி 6) தொடங்கப்பட்டு, நாளை மறுநாள் (ஜனவரி 7) விவாதம் முடிவுறும்.

மேலும், வெள்ளிக்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதிலுரையாற்றுவார். கரோனா பரவல் உள்ள நிலையில், இரண்டு நாட்கள் மட்டுமே சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும்" என்றார்.

இதையும் படிங்க: மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்: ஒரு வருடத்தில் முடிக்க அரசு உத்தரவு

Last Updated : Jan 5, 2022, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.