ETV Bharat / city

ஆண்டுகள் கடந்து பள்ளி வாசம் காணும் மாணவர்கள் - செப்.1 பள்ளிகள் திறப்பு உறுதி - கல்லூரிக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

Schools Opening Confirm in Tamil Nadu, tn shools reopening, தமிழ்நாடு பள்ளிகள் திறப்பு, திறக்கப்படும் வகுப்புகள், பள்ளிகள் திறப்பு, பள்ளிகள் திறப்பு உறுதி, பள்ளி வழிகாட்டு நெறிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள், கல்லூரிக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
பள்ளிகள் திறப்பு
author img

By

Published : Aug 30, 2021, 7:28 PM IST

Updated : Aug 30, 2021, 8:19 PM IST

19:21 August 30

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின்படி, நாளை மறுநாள் (செப் 1) பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலில் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரிகளும் அன்றைய தேதியில் இருந்து திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், ஆசியர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுவதால் பாடத்திட்டங்களை 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

  • அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி, கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்
  • கரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது
  • மாணவர்களுக்கு சத்து மாத்திரை, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவற்றை வழங்க வேண்டும்
  • கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்
  • ஒரே நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்
  • பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்
  • பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்
  • பள்ளி வாகனங்களை கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
  • பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்
  • ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
  • பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்
  • பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்
  • கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்களோ மாணவர்களோ பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை

மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

கல்லூரிக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

  • செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்திக்க வேண்டும்.
  • கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
  • மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • தடுப்பூசி செலுத்தாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.
  • தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர அவசியமில்லை.
  • நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • கல்லூரி நுழைவு வாயில்களில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும்.
  • கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், டயர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

Last Updated : Aug 30, 2021, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.