இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. மாநில அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையால் ஆகஸ்ட் மாதம் 127 இருந்த உயிரிழப்புகள் தற்போது 15ஆக குறைந்துள்ளது.
இங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு உருமாறிய கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனா வைரஸ் தொற்று எனக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு புனேவில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
மேலும், பொதுமக்கள் புத்தாண்டினைப் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும், ஒரே இடத்தில் கூடிநின்று உணவு அருந்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும், வரும் புத்தாண்டு நோயற்ற புத்தாண்டாக அமைய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் பொதுமக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே கரோனா வைரஸ் தொற்று குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளமுடன் வாழ்க - முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து