ETV Bharat / city

மான்கள் இறப்பு- செய்திக்கு மறுப்புத் தெரிவித்த ஆளுநர் மாளிகை!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 5 மாதங்களில் 20 மான்கள் இறந்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கை செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

ராஜ்பவனில் தொடர் மான்கள் இறப்பு- பொய் செய்தி வெளியிட்ட பத்திரிக்கைக்கு கண்டனம்!

author img

By

Published : Apr 29, 2022, 3:07 PM IST

Updated : Apr 29, 2022, 7:29 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ராஜ்பவன் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் செய்தி வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஏப்ரல் 20.2022 அன்று வெளியிடப்பட்ட சென்னை பதிப்பகத்தில் முதல் பக்கத்தில் "Spike in blackbuck deaths in Raj Bhavan, 20 in 5 months" என்ற தலைப்பின்கீழ் வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது மற்றும் சரியான தகவல்கள் சேகரிக்கப்படாமலும், ராஜ்பவனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்த மான்கள்-எண்ணிக்கை குறைவு: ராஜ்பவனில் இருக்கும் பிளாக்பக் மான் வகைகளில் 5 மாதத்தில் 20 மான்கள் இறந்ததாகக் கூறப்படும் எண்ணிக்கை முற்றிலும் தவறானது. மேலும் இது போன்ற வன விலங்கு உயிரிழப்பு இயல்பாக வனப்பகுதியில் நடக்கும் என்றும், வனத்துறையினர் உறுதி செய்த இறப்புகள் உங்கள் செய்தியில் குறிப்பிட்டதை விட குறைவானதுதான் என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. மேலும் நட்சத்திர கார்டன் பகுதியில் உள்ள புற்கள் மெக்சிகன் ரக செயற்கை புற்களாக மாற்றப்பட்டுள்ளன எனவும், இந்த புற்களை உண்பதாலேயே மான்கள் இறப்பதாகக் குறிப்பிட்டு இருப்பதும் தவறு. நட்சத்திர கார்டன் பகுதியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அவை வழக்கமான மான்கள் மேயக்கூடிய நிலமாகத்தான் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கியுள்ளது.

இது மேய்ச்சல் நிலம் அல்ல: ராஜ்பவனின் மெயின் லான் எனப்படும் அறை வெளிப்புறத்தில் பொது மக்கள் காணும் வகையில் அமைந்துள்ளது. ராஜ் பவனின் அனைத்து நிகழ்ச்சிகளும் இங்குதான் நடைபெற்று வருகிறது. "வரவேற்பு", "சத்தியப் பிரமாணம்" "பொங்கல் வரவேற்பு" உள்ளிட்ட ராஜ்பவனின் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இந்த இடத்தில்தான் நடைபெறும். இங்கு இருக்கும் புல்வெளி தோட்டக்கலைத்துறையால் புதுப்பிக்கப்படும். முன்னதாக நவம்பர்-2021இல் புதுப்பிக்கப்பட்டது. இங்கு உள்ள புல்வெளி விலங்குகளுக்கான மேய்ச்சல் நிலம் இல்லை.

உங்கள் பக்கத்தில் வெளியிடப்பட்ட மெயின் லானின் புல்வெளி புகைப்படம் மிகவும் பாதுகாப்பு பிரச்சனை சார்ந்ததாகும். மிகவும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட அரசு மாளிகையில் விதிகளை மீறி புகைப்படம் எடுப்பது கண்டிக்கத்தக்கது. இந்த புகைப்படங்களை எடுத்தவரின் விவரங்களை உடனடியாக எங்களிடம் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

வனத்துறைதான் பொறுப்பு: தமிழ்நாடு அரசின் வனத்துறையே இந்த வனவிலங்குகளின் கண்காணிப்பு மற்றும் கிண்டி தேசிய பூங்காவையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதில் ராஜ்பவன் மாளிகையும் அடங்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த மான்களின் இறப்பு குறித்து வனத்துறையினர் எந்த தகவலும் வெளியிடவில்லை.

ராஜ்பவன் குறித்து அவதூறு அளிக்கும் வகையிலான செய்தியை வெளியிடும் முன் ராஜ்பவன் செயலகத்தின் திறமையான அலுவலர்களிடம்கூறி அவர்களது கருத்துகளை எடுத்துக்கொண்டிருந்தால் இது சரியான பத்திரிகை தர்மமாகவும் பொறுப்பான செய்தியாகவும் இருந்திருக்கும். மேலே கூறப்பட்ட காரணங்களால், தாங்கள் உடனடியாக உண்மையான செய்தியை வெளியிட வேண்டும். மேலும் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்’ என ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ஆளுநர்களுக்கும், முதலமைச்சருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

Last Updated : Apr 29, 2022, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.