சென்னை: கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்றுவரும் மாணவ மாணவியரின் கல்வி அறிவு - பொது அறிவினை வளர்க்கவும், வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேற்றம் அடைவதற்காவும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் தலா ஒரு நூலகம் (செம்மொழி நூலகம்) என்ற பெயரில் இரண்டு கோடியே 73 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு அமைப்பு
செம்மொழி நூலகம் அமைப்பது தொடர்பாக மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இயக்குநர், பொது நூலகத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர்/அலுவலர் உள்ளிட்ட எட்டு நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் சிறார் உதவி எண்கள் - ஸ்டாலின் அறிவிப்பு