நியாயவிலைக் கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்புப் பலகைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
வேலை நேரம், இன்றியமையா பண்டங்கள் இருப்பு விவரம், விநியோகம் செய்யப்பட்ட விவரம், விற்பனை விலை உள்ளிட்டவை, தகவல் பலகையில் இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்குத் தொல்லை கொடுக்கும் பாஜக - நாராயணசாமி குற்றச்சாட்டு