ETV Bharat / city

சிறப்பாக செயல்படும் தமிழக டிஜிபி - அமைச்சர் சேகர் பாபு

author img

By

Published : Dec 13, 2021, 8:11 AM IST

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சிறப்பாக செயல்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

சென்னை: நுங்கம்பாக்கத்தில் யூகே, கொரியா, ரஷ்யா, உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 18 தூதரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கு பெற்ற கால்பந்து போட்டி இன்று துவங்கியது. இதனை இந்து சமயம் அறநிலையத் துறை அமைச்சர் துவங்கி வைத்தார்.

ஆட்சியைக் கலைத்து ஆட்சி

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் பேசிய கூறியதாவது," பாஜக குதிரைப் பேரம் நடத்தி, கொல்லைப் புறமாக வந்துதான் ஆட்சியைப் பிடிக்கின்றார்கள் எனவும் மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்து ஆட்சியைப் பிடித்ததாகவும், இதேபோல் கர்நாடகாவிலும் ஆட்சியைக் கலைத்து ஆட்சியை கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.

இதைத் தான் அவர்கள் ஆளும் 17 மாநிலங்களிலும் செய்து வருகின்றனர். முதலில் அவர்கள் இதற்குப் பதில் சொல்லட்டும் தெரிவித்தார். மேலும், பாஜகவினர் குறை கூறுவதை மட்டுமே ஒரு தொழிலாக வைத்துள்ளார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைதி பூங்கா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, தமிழ்நாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கக்கூடிய காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு பல்வேறு வகையில் எடுத்துக்காட்டாகச் செயல்படக்கூடியவர் என்றும், அவர் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்தியத் துணைக் கண்டத்திற்கு முன்மாதிரியாக இருப்பவர் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி, போதைப்பொருள் விற்பவர்களைக் கைது செய்து தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக நிலை நிறுத்தி கொண்டிருப்பவர் என்றும் தெரிவித்தார்.

முப்படைத் தளபதியின் மரணத்தில் உடனடியாக மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, உலக அளவில் பாராட்டப்பட்ட காவல்துறை தமிழ்நாடு காவல்துறை என தெரிவித்தார்.

லஞ்ச லாபத்திற்கும் அப்பாற்பட்டு, தீவிரவாதம் மற்றும் மதவாதத்திற்கு இடம் தராமல் செயலாற்றக் கூடிய காவல்துறைத் தலைவரை முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பதில் கூற வேண்டியதில்லை

அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும் என்று இருப்பவர்கள் வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் கவலைப்பட்டு பதில் கூற வேண்டிய நிலை இல்லை என கூறிய அவர், எங்களை மக்கள் பணிக்கு முதலமைச்சர் அர்ப்பணித்துள்ளார். அந்தப் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என திட்டவட்டமாகக் கூறினார்.

இதையும் படிங்க: ஜெ. தீபா, ரஜினி குறித்து திருவாய் மலர்ந்த செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.