அந்த கடிதத்தில், "காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை விஷயத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் தமிழ்நாட்டின் வாதத்தை கேட்க வேண்டும் என்று கடந்த மாதம் 24ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால் தற்போது மத்திய வனம் சுற்றுச்சூழல் அமைச்சகம், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் நடவடிக்கைகள் காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது. இதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. எனவே கர்நாடகத்தின் இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.