ETV Bharat / city

சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்; மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது! - arrest

சென்னை: சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

கைது
author img

By

Published : Jul 17, 2019, 3:43 PM IST

தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்துவதற்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால், காவல் துறையினரின் இந்த செயல் ஜனநாயக விரோதம் எனக் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பினைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், தமிழ்நாடு அரசையும், காவல் துறையினரையும் எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட அவர்கள் நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர்.

இதனையடுத்து சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ராஜூ கூறுகையில், ’ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை. அதனை ஏற்க மறுத்து இந்த அரசு போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது பொய் வழக்குகள் தொடர்ந்து சிறைக்கு அனுப்புகிறது. தமிழ்நாடு அரசு இந்தப் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கடைசி தொண்டரின் உயிர் உள்ளவரை கடுமையான போரட்டங்களை முன்னெடுப்போம்’ என்றார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.07.19

மக்கள் அதிகாரம் அமைப்பினர் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிடோர் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சேப்பாக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டம்...

தமிழகத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்துவதற்கு மேலிட உத்தரவு என்று சொல்லி காவல்துறையினர் தடை விதிக்கின்றனர். இதுபோன்ற ஜனநாயக விரோத காவல்துறையினர் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட சேப்பாக்கத்தில் ஒன்று கூடினர். அவர்களை சட்டமன்றம் வரை செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்ததால் சேப்பாக்கத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேட்டியளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ராஜூ,

ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், மீத்தேன் உள்ளிட்ட மக்களை விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் எனக் கோரி ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்க காவல்துறையினர் மறுக்கின்றனர். ஜனநாயகத்தில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை என்பதைகூட இந்த அரசு ஏற்க மறுத்து போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டி சிறைக்கு அனுப்புகிறது. தமிழக அரசு இந்தப் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் கடைசி தொண்டர் உயிர் உள்ளவரை கடுமையான போரட்டங்களை முன்னெடுப்போம் என்றார்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.